2 C
New York
Monday, December 29, 2025

காசாவில் போர்நிறுத்தம் கோரி பெர்னில் 20 ஆயிரம் பேர் ஆர்ப்பாட்டம்.

பெர்னின் வீதிகளில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டு, காசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

காசாவுக்கு ஆதரவாக சனிக்கிழமை பிற்பகல் சுமார் 20 ஆயிரம்  பேர் வரை  மத்திய பெர்ன் வழியாக அணிவகுத்துச் சென்றனர்.

ஒரு சிறிய குழு அவ்வப்போது இடையூறுகளை ஏற்படுத்தினாலும், இந்த ஆர்ப்பாட்டப் பேரணி அமைதியாகவே இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதிலுமிருந்து வந்த 20 ஆயிரம் வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

சுவிஸ் தொழிற்சங்க கூட்டமைப்பு (யுஎஸ்எஸ்), சர்வதேச மன்னிப்புச்சபை, சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சி உட்பட சுமார் 30 அமைப்புகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.

சுவிட்சர்லாந்தின் நிர்வாக அமைப்பான பெடரல் கவுன்சில், காசாவில் உடனடி, நீடித்த மற்றும் சுயாதீனமாக கண்காணிக்கப்படும் போர் நிறுத்தத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles