-3.3 C
New York
Sunday, December 28, 2025

சூரிச் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்ட விமானம்- ரயர் வெடித்ததா?

சூரிச் விமான நிலையத்தில் இருந்து சிகாகோ நோக்கிப் புறப்பட்ட  யுனைடெட் ஏர்லைன்ஸ் UA 12 விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு பயணிகள் அவசரமாக இறக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9:44 மணிக்கு இந்த விமான சிகாகோவிற்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த து.

ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது நிறுத்தப்பட்ட விமானத்தைச் சுற்றிய அவசர சேவை வாகனங்கள் காணப்பட்டன.

பயணிகள் தீயணைப்பு சேவையால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

விமானம் 45 நிமிடங்களுக்கும் மேலாக ஓடுபாதையில் காணப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மருத்துவ அவசரநிலை அல்லது தொழில்நுட்பக் கோளாறு என சந்தேகிக்கப்படுகிறது.

சூரிச் கன்டோனல் காவல்துறை இது ஒரு பொலிஸ் நடவடிக்கை அல்ல என்று கூறியது.

விமான நிலையமும்  பயணிகள் வெளியேற்றத்தை உறுதிப்படுத்திய போதும்,  காரணம் குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை.

சூரிச் பாதுகாப்பு மற்றும் மீட்பு  பிரிவின் தகவல்களின்  படி,  விமானத்தின் டயர்கள் வெடித்ததால் ஓடுபாதையில் ஒரு விமானத்தை அகற்ற வேண்டியிருந்த தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் -bluewin

Related Articles

Latest Articles