2.1 C
New York
Thursday, February 12, 2026

சுவிசில் உயர் வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கும் கிராபுண்டன் மக்கள்.

சுவிட்சர்லாந்தில் கிராபுண்டன் மக்கள் மிக உயர்ந்த சமூக நல்வாழ்வைக் கொண்டுள்ளனர் என Obsan health என்ற ஆய்வு கூறுகிறது.

கன்டோனின் கிழக்குப் பகுதியில் ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில் 73.6% பேர் தாங்கள் முழு ஆற்றலுடனும் உயிர்ச்சக்தியுடனும் இருப்பதாகக் கூறினர்.இங்கு சுவிஸ் சராசரி 66.5% ஆகும்.

கிராபுண்டன் கன்டோன் வாழ்வதற்கு ஒரு இடமாக இருப்பதற்கு இது ஒரு நல்ல சான்றாகும்.

இந்த ஆய்வின்படி, கிராபுண்டன் மக்கள் சுவிட்சர்லாந்தில் சிறந்தவர்களாக உணருகின்றனர்.அவர்கள் மத்தியில் மனச்சோர்வு மிகக் குறைவாகவே உள்ளது.

அவர்கள் நன்றாக தூங்குபவர்களாகவும், தங்கள் வாழ்க்கையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் உணர்கிறார்கள் எனவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வில் 1,026 பேர் விசாரிக்கப்பட்டனர், அவர்களில் 533 பேர் பெண்கள் மற்றும் 493 ஆண்கள்; 868 பேர் சுவிஸ் நாட்டினர், 158 பேர் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

இந்த கணக்கெடுப்பு சுவிட்சர்லாந்து முழுவதும் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுடன் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நடத்தப்படுகிறது.

கிராபுண்டனின் மக்கள் தொகையில் சுமார் 80.7% பேர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதாகக் கூறினர். சுவிஸ் சராசரி 76% ஆகும்.

இருப்பினும், கிராபுண்டன் குடியிருப்பாளர்களும் அதிக விபத்துக்களைக் கொண்டிருந்தனர்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles