சென் காலனில் உள்ள சென் மார்கிரெதன் அருகே A1 வீதியில் ஒரு காரும் அதன் டிரெய்லரும் தீப்பிடித்து எரிந்தன.
திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விரைவான தீயணைப்பு முயற்சிகள் இருந்தபோதிலும், வாகனங்கள் முற்றிலுமாக எரிந்ததாக சென் காலன் கன்டோனல் காவல்துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
காரின் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மூலம்- 20min.