0.8 C
New York
Monday, December 29, 2025

வாகனத் தரிப்பிடத்தில் பாரிய தீவிபத்து- 100 வாகனங்கள் தப்பின.

ஆர்காவ் கன்டோனில் உள்ள மோஹ்லினில் ஒரு குடியிருப்பு வளாகத்தின் பகிரப்பட்ட தரிப்பிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு 11:30 மணிக்கு இந்த தீவிபத்து ஏற்பட்டது.

சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் சுமார் பத்து தீயணைப்பு இயந்திரங்கள் உட்பட ஒரு பெரிய குழுவுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என்ற போதும், புகை குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது.

நிலத்தடி கார் தரிப்பிடத்தில் ஏற்பட்ட  விபத்தை அடுத்து, ட அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கும் 70 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ரயில் நிலையத்தில் பராமரிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள்  அடுக்குமாடி குடியிருப்பிற்குத் திரும்ப அனுமதிக்கப்பட்ட போதும் மின்சாரம் அல்லது குழாய் நீர் வசதி கிடைக்கவில்லை.

கரும் புகையால் நிரம்பியிருந்த தரிப்பிடத்துக்குள் சுவாசக் கருவிகளை பொருத்திக் கொண்டு நுழைந்த தீயணைப்பு பிரிவினர், எரிந்து கொண்டிருந்த மூன்று கார்களின் நெருப்பை அணைத்தனர்.

அந்த நிலத்தடி  தரிப்பிடத்தில் சுமார் 100 கார்கள் மற்றும் பிற வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

உரிய நேரத்தில் தீ அணைக்கப்படாமல் போயிருந்தால் அனைத்து வாகனங்களும் நாசமாகியிருக்கும்.

மூலம் –20min.

Related Articles

Latest Articles