0.8 C
New York
Monday, December 29, 2025

ஆதரவற்ற இளம் புகலிடக் கோரிக்கையாளர் மையத்தில் கத்திக்குத்து.

ஜுக் நகரில் உள்ள ஆதரவற்ற சிறார் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தங்குமிடமான சென்ஹூட்டேயில் நான்கு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து ஒருவர் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

16 வயது சிறுவன் ஒருவன் அதே வயதுடைய ஒரு சிறுவனை கத்தியால் குத்திக் காயப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றுள்ளார்.

மோதலில் ஈடுபட்ட 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் நான்கு பேருமம்,  கைது செய்யப்பட்டு ஜுக் மாகாண இளைஞர்களுக்கான அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு சிறார்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணை தொடங்கியுள்ளது.

அவர்களில் மூன்று பேருக்கு சண்டையிட்டதற்காக இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கத்தியைப் பயன்படுத்திய இளைஞர் இன்னும் காவலில் உள்ளார்.

மூலம் –20min.

Related Articles

Latest Articles