பல மீட்டர் உயரத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
ஆரம்ப மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஜூக் பொலிசார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை பிற்பகல் 4:45 மணியளவில், ஓபராகேரி நகராட்சியில் உள்ள பச்வேக்கில் இந்த விபத்து நிகழ்ந்தது.
கூரையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, 33 வயது நபர் சுமார் 6.5 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தார்.
அவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
மூலம்-20min

