லொறி ஒன்று தீப்பற்றி எரிந்ததால், மூடப்பட்ட கோட்ஹார்ட் சுரங்கப்பாதை, பல மணி நேரத்திற்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை கோட்ஹார்ட் சுரங்கப்பாதையில் ஒரு லொறி தீப்பிடித்ததாக யூரி கன்டோனல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக சுரங்கப்பாதை இரு திசைகளிலும் மூடப்பட்டது.
யூரியின் வடக்கு நுழைவாயிலிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் வாகனம் தீப்பிடித்தது.
இதனால் மூடப்பட்ட சுரங்கப்பாதை, இரவு 11:15 மணி முதல், மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது
விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூலம்-20min

