நியூகிர்ச்சில் (எக்னாச்) 60 வயது பெண் ஓட்டுநர் ஒருவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில், உயிருக்கு ஆபத்தான காயங்களுக்குள்ளானார்.
நேற்று பிற்பகல் 3:30 மணிக்குப் பிறகு ஆர்போனெர்ஸ்ட்ராஸில் ஆர்போனை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர் எப்நெட் அருகே வீதியை விட்டு வெளியேறி, ஒரு மர வேலியை பிய்த்துக் கொண்டு மீண்டும் வீதியில் ஏறினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் வீதியை விட்டு விலகி ஒரு விளக்கு கம்பத்தில் மோதினார்.
இதனால் வாகனம் கவிழ்ந்தது.
விபத்து நடந்த இடத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநரை மருத்துவ உதவியாளர்கள் கடும் முயற்சிகளுக்குப் பின்னர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து நடந்த சூழ்நிலைகளை விசாரிக்க துர்காவ் கன்டோனல் காவல்துறை தடயவியல் புலனாய்வுப் பிரிவை நிறுத்தியுள்ளது.
மூலம்- 20min.

