சுவிஸ் விமானம் ஒன்று நேற்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
பெல்கிரேட் நோக்கிப் புறப்பட்ட விமானமே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் சூரிச்சில் இறக்கப்பட்டுள்ளது.
சூரிச் விமான நிலையத்தை சில முறை சுற்றி வந்த பின்னர் நாங்கள் மீண்டும் தரையிறங்கினோம். இப்போது நாங்கள் அனைவரும் வீடு திரும்பிவிட்டோம் என்று பயணி ஒருவர் கூறினார்.
சில நாட்களுக்குள் அதே பாதையில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
115 பயணிகளை ஏற்றிய விமானம், ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மூலம்- 20min

