சூரிச் கன்டோனல் காவல்துறை இணையவழி காவல் நிலையத்தை அறிமுகப்படுத்துகிறது.
ஒரு வருட சோதனை கட்டத்திற்குப் பின்னர் பொதுமக்களிடமிருந்து நேர்மறையான பதில் கிடைத்துள்ளதை அடுத்து, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோதனை கட்டத்தில், சுமார் 2,000 பேர் இந்த சேவையைப் பயன்படுத்தியதாக சூரிச் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
1,750 க்கும் மேற்பட்ட புகார்கள் தாக்கல் செய்யப்பட்டன, 230 விசாரணைகள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டன.
சோதனைக் காலத்தின் பாதியிலேயே, சேவை விரிவுபடுத்தப்பட்டது.
2025 பிப்ரவரி முதல், சூரிச் நகர காவல்துறை கூடுதல் ஊழியர்களுடன் இந்த திட்டத்தை ஆதரித்து வருகிறது.
இணையவழி காவல் நிலையம் பொதுமக்கள் பல்வேறு குற்றங்களை இணையவழியில் 24 மணி நேரமும் புகாரளிக்க அனுமதிக்கிறது.
இணையவழி காவல் நிலையத்தை நிரந்தரமாக அறிமுகப்படுத்துவது, கன்டோன் முழுவதும் உள்ள பாரம்பரிய சூரிச் கன்டோனல் காவல் நிலையங்களின் எண்ணிக்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
மூலம்- swissinfo

