நியூசாடெல் கன்டோனின் மொன்டல்செஸ் பகுதியில் நேற்றுக் காலை தப்பிச் சென்ற 600 கிலோ எடையுள்ள காளை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ரோசமான இந்தக் காளையினால் ஆட்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் அதனை அணுக வேண்டாம் என ஸ்விஸ்அலேட்ர்ஸ் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, 10 பொலிஸ் ரோந்துப் படையினர், நான்கு வனவிலங்கு காவலர்கள் மற்றும் ஒரு கால்நடை மருத்துவர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு பெரிய தேடுதல் குழு அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.
இதன்போது, பல பசுக்களால் சூழப்பட்ட ஒரு தொழுவத்தில் அந்தக் காளை கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற காளையினால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
சரோலாய்ஸ் இனத்தைச் சேர்ந்த காளை, அதன் உரிமையாளரிடம் திருப்பித் கொடுக்கப்படவுள்ளது.
மூலம்- swissinfo