23.5 C
New York
Monday, July 14, 2025

வேலியுடன் மோதிய கார்- 90 வயது ஓட்டுநர் மரணம்.

துர்காவ் கன்டோனில் நேற்று நடந்த கார் விபத்தில் 90 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

அம்ரிஸ்வில்லில் நடந்த இந்த விபத்து மருத்துவ காரணத்தால் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை 10:15 மணியளவில், சோமேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வாகனம் வேலியில் மோதியதாக துர்காவ் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

அவசர சேவைகள் உடனடியாக உதவி வழங்கிய போதும்,  அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles