Vaud கன்டோனில் உள்ள Orges இல், நேற்று மாலை, காருடன் நேருக்கு நேர் மோதிய மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த விபத்தில் மின்சார வாகனத்தில் பயணித்த 33 வயது பயணி ஒருவர் உயிரிழந்தார். ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் காயமடைந்தனர்.
சத்தம் கேட்டு ஓடிச் சென்ற உள்ளூரைச் சேர்ந்த இரண்டு பேர், மின்சார வாகனம் முழுமையாக தீப்பிடிப்பதற்கு முன்னர், ஓட்டுநரையும் பயணியையும் மீட்டனர்.
30 வயதான ஓட்டுநர் விமான மீட்பு ஹெலிகொப்டர் மூலம் லௌசேன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆர்காவ் நகரைச் சேர்ந்த 47 மற்றும் 48 வயதுடைய காரில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம்- bluewin