சூரிச் கன்டோனில் உள்ள, Speck-Fehraltorf பிராந்திய விமான நிலையத்துக்கு அருகில் உள்ள, “ஸ்பெக்” உணவகத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
விமானப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த உணவகத்தில் முதன்மையாக பார்பிக்யூவுக்கு பெயர் பெற்றது.
இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு பாரிய தீ விபத்து காரணமாக உணவகம் இப்போது மூடப்பட்டுள்ளது. இதனை நிர்வாகிகள் பேஸ்புக்கில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணிக்குப் பின்னர் இங்கு தீவிபத்து ஏற்பட்டதாக சூரிச் கன்டோனல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
விமான நிலைய உணவகம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது என்றும், கட்டடம் முற்றிலுமாக அழிந்து விட்டதாகவும், என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை விமான நிலையத்தில் ஒரு ஹங்கர் மற்றும் ஒரு பட்டறை உட்பட அருகிலுள்ள கட்டடங்களும் தீயினால் சேதமடைந்தன
தீயணைப்புத் துறை அனைத்து விமானங்களையும் சரியான நேரத்தில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றதாகவும், எவருக்கும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு பணியாளர்கள் களத்தில் இறக்கப்பட்டிருந்தனர்.
சூரிச் கன்டோனல் காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து ஸ்பெக் விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் மறு அறிவிப்பு வரும் வரை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மூலம்- bluewin