27.8 C
New York
Monday, July 14, 2025

போக்குவரத்து நெரிசல்களுடன் தொடங்கிய கோடை விடுமுறை.

போக்குவரத்து நெரிசல்களுடன்  கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.

சனிக்கிழமை, கோட்ஹார்ட் சுரங்கப்பாதையின் முன் நீண்ட போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.

யூரி மாகாணத்தில் உள்ள எர்ஸ்ட்ஃபெல்ட் மற்றும் கோஷ்செனன் இடையே அதிகாலையில் போக்குவரத்து நெரிசலினால், 11 கிலோமீட்டர் வரை வாகனங்கள்  நகர முடியாமல் காணப்பட்டன.

கோட்ஹார்ட் வடக்கு நுழைவாயிருக்கு முன்பாக, A2 மோட்டார் பாதையில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வாகனங்கள் காத்திருக்க நேரிட்டதாக  TCS அதன் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை பிற்பகல், ஆம்ஸ்டெக் மற்றும் கோஷ்செனன் இடையேயான பகுதியில், போக்குவரத்து நெரிசலினால், ஆறு கிலோமீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் காத்திருந்தன. இங்கு சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

வடக்கு நோக்கி, குயின்டோ மற்றும் டிசினோ மாகாணத்தில் உள்ள ஐரோலோ விடுமுறை பகுதிக்கு இடையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக சனிக்கிழமை பிற்பகல் 20 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டது.

சியாசோ-ப்ரோஜெடாவில் உள்ள இத்தாலிய எல்லைக் கடவையிலும் பயணிகள் சுமார் இருபது நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

சனிக்கிழமை பிற்பகல், பூச்ஸ், நிட்வால்டன் மாகாணம் மற்றும் லூசெர்ன் ஏரியில் உள்ள சீலிஸ்பெர்க் சுரங்கப்பாதைக்கு இடையிலான கோட்ஹார்டில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.

TCS இன் கூற்றுப்படி, அதிக போக்குவரத்து மற்றும் மூடப்பட்ட பாதை காரணமாக பயணிகள் இங்கு சுமார் 25 நிமிடங்கள் காத்திருந்தனர்.

கோட்ஹார்டில் பிரச்சினைகள் வெள்ளிக்கிழமை இரவே தொடங்கியது.

ஆரம்பத்தில் இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து  நெரிசல் காணப்பட்டது.

அதிகாலை 4 மணி முதல், போக்குவரத்தின் அளவு வேகமாக அதிகரித்தது. அதிகாலையில், வாகனங்கள் பத்து கிலோமீட்டர் வரை தடைப்பட்டு நி்ன்றதாக TCS தெரிவித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles