Hirzel இல் நேற்று பிற்பகல் 2:45 மணியளவில், இரண்டு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
47 வயது நபர் ஒருவர் ஜுகர்ஸ்ட்ராஸ் வழியாக சிஹ்ல்ப்ரக் நோக்கி 6 வயது மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அந்த வாகனம் ஜுபோர்குர்வே என்று அழைக்கப்படும் வெளியேறும் பாதையில், எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியது.
40 வயது ஓட்டுநர், அவரது 36 வயது மனைவி மற்றும் அவர்களது 4 வயது மகன் ஆகியோர் அந்த வாகனத்தில் இருந்தனர்.
விபத்தினால், இரண்டு கார்களும் நடைபாதையின் குறுக்கே சறுக்கி, புல்வெளியில் போய் நின்றன.
விபத்தில் ஐந்து பயணிகளும் காயமடைந்தனர். இரண்டு பேர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் மூன்று பேர் அம்புலன்ஸ் மூலம் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூலம்- bluewin