என்னெண்டாவில் (Ennenda) விவசாய வாகனம் ஒன்று பல நூறு மீற்றர் பள்ளத்தில் விழுந்த விபத்தில் அதனை ஓட்டிய விவசாயி உயிர் தப்பியுள்ளார்.
நேற்று காலை 11 மணியளவில், என்னெட்பெர்க் மலைகளில் 25 வயது நபர் ஒருவர் தனது விவசாய வாகனத்தில் இருந்து, ஈரமான, சாய்வான புல்வெளியில் உரம் தூவிக்கொண்டிருந்தார்.
இதன்போதே, பாரிய பள்ளத்தில் பல நூறு மீட்டர்கள் அவரது வாகனம் சரிந்து விழுந்தது.
பள்ளத்தாக்கில் விழுந்த போது மரங்கள், பாறைகளில் மோதிய அது முற்றாக சிதைந்து போனது.
எனினும், அதன் ஓட்டுநர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
மூலம்- 20 min.