Zermatt இல் உள்ள பான்ஹோஃப்ஸ்ட்ராஸில் நகைக் கடையை உடைத்து கொள்ளையிட்ட மூவரைத் தேடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் இந்தக் கொள்ளை இடம்பெற்றது.
அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஒரு கடை ஜன்னலை உடைத்து பல கைக்கடிகாரங்களைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர்.
குற்றவாளிகள் கருப்பு நிற உடையணிந்து முதுகுப்பைகளை வைத்திருந்தனர்.
வலைஸ் கன்டோனல் பொலிசார் தற்போது சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் தகவல்களுக்காக பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தற்போதைய தகவலின்படி, மூன்று பேர் இதில் ஈடுபட்டுள்ளனர், அவர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.
மூலம்- 20 min.