சென் காலன், ஆல்ட்ஸ்டாட்டனில் உள்ள ஒரு துப்பாக்கி விற்பனைக் கடையில் இன்று அதிகாலை 4:45 மணியளவில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட கைத்துப்பாக்கிகளைத் திருடிக் கொண்டு குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளனர்.
முன்னதாக, மார்பாக்கில் உள்ள ஒரு கராஜில் இருந்து திருடர்கள் ஒரு கறுப்பு ஆடி A8 மற்றும் ஒரு வெள்ளை மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர்.
அதிகாலை 4:45 மணியளவில் ஓபெரியெர்ஸ்ட்ராஸில் உள்ள ஒரு துப்பாக்கி கடையில் திருட்டு எச்சரிக்கை மணி ஒலித்தது.
சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்ட ரோந்து அதிகாரிகள், நுழைவாயில் மீது மோதிய நிலையில் கருப்பு ஆடி A8 காரை கண்டனர்.
குற்றவாளிகள் கடைக்குள் நுழைந்து, இரண்டு காட்சிப் பெட்டிகளை உடைத்து, பத்துக்கும் மேற்பட்ட கைத்துப்பாக்கிகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் மெர்சிடிஸ் பென்ஸ் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றவாளிகளைப் பிடிக்க விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.