அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் உக்ரைனுக்கு பட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை வழங்குவதற்கு முன்னுரிமை கொடுப்பதால், சுவிட்சர்லாந்துக்கு அவற்றை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் பாதுகாப்பு அமைச்சுக்கு புதன்கிழமை இதுபற்றித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு ஆயுத அமைப்புகளை வழங்கும் நாடுகள் அமெரிக்காவிடம் இருந்து விரைவாக அவற்றை வாங்குவதால் இந்த இழுபறி ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனி, உக்ரைனுக்கு மேலும் இரண்டு பட்ரியாட் ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்கிக் கொடுக்க முடிவு செய்துள்ளது.
இந்த புதிய முன்னுரிமைத் திட்டங்களால் சுவிட்சர்லாந்து பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் திட்டமிட்டதை விட தாமதமாகவே புதிய தயாரிப்புகளைப் பெறும் என கூட்டாட்சி கவுன்சிலுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து 2022 ஆம் ஆண்டில் நீண்ட தூர தரை அடிப்படையிலான வான் பாதுகாப்புக்காக ஐந்து பட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை கொள்வனவு செய்வதற்கு விண்ணப்பித்தது.
இவை 2027 இல் தொடங்கி 2028 இல் விநியோகித்து முடிக்கத் திட்டமிடப்பட்டது.
இதனால் எத்தனை அமைப்புகளின் விநியோகம் பாதிக்கப்படும், ஆயுதங்களின் விநியோகமும் பாதிக்கப்படுமா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை.
மூலம்- swissinfo