சூரிச்சின் Pfungen இல் துப்பாக்கி கடையில் கொள்ளையிட முயன்ற இரண்டு பேரை சூரிச் கன்டோனல் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் ஸ்லோவாக் மற்றும் பிரெஞ்சு நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை குற்றவாளிகள் கடையின் ஜன்னல் மீது வாகனத்தால் மோதி உள்ளே நுழைந்துள்ளனர்.
மே மாத இறுதியில் இதே கடையில் இருந்து சுமார் 50 கைத்துப்பாக்கிகள் திருடப்பட்டன.
பொலிசார் கட்டிடத்திற்குள் நுழைந்தால், வெடிப்பு ஏற்படலாம் என்று கைது செய்ய முயன்ற போது, ஒருவர் பொலிசாரை மிரட்டினார்.
இதையடுத்து, துப்பாக்கி கடையைச் சுற்றியுள்ள ஒரு பெரிய பகுதியை சுற்றி வளைத்து, முன்னெச்சரிக்கையாக, அருகிலுள்ள பாதையில் ரயில் போக்குவரத்தையும் நிறுத்தினர்.
காலை 5:30 மணி முதல் 8:15 மணி வரை பிஃபங்கன் வழியாக ரயில்கள் ஓடுவதை நிறுத்தினர்.
இதன் பின்னர் பொலிசாரு உள்ளே நுழைந்த சூரிச் தடயவியல் நிறுவனத்தின் நிபுணர்கள் கட்டிடத்தை முழுமையாக சோதனை செய்தனர், ஆனால் எந்த ஆபத்தான பொருட்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சுவிஸ் துப்பாக்கி கடைகளில் திருட்டுகள் சமீபத்திய நாட்களில் அதிகரித்துள்ளன.
மூலம்- bluewin