16.6 C
New York
Wednesday, September 10, 2025

கால்பந்து போட்டியை அடுத்து வன்முறை – பொலிஸ் துப்பாக்கிச் சூடு.

சூரிச்சில் நேற்று இரவு நடந்த கால்பந்து போட்டிக்குப் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து பொலிசார்,  ரப்பர் தோட்டாகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

FC Zurich மற்றும் FC Sion அணிகளுக்கிடையிலான கால்பந்து போட்டியைத் தொடர்ந்து, வன்முறைகள் இடம்பெற்றன.

இதனால், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பல பொலிஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

போட்டிக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒரு வாகனம் குறித்து சூரிச் நகர பொலிசாருக்கு இரவு 10:55 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பாஸ்லர்ஸ்ட்ராஸில் நடந்த போக்குவரத்து சோதனையின் போது, FCZ ரசிகர்களின் ஒரு பெரிய குழு பொலிஸ் அதிகாரிகளைத் துன்புறுத்தியது.

இதையடுத்து அதிகாரிகள் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர். எனினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

அதிகாலை 2:30 மணியளவில், அல்பிஸ்ரீடர்பிளாட்ஸில் ஒரு குப்பைத் தொட்டி எரிந்து கொண்டிருந்தது.

மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு குப்பைக் கொள்கலன்கள், ஒரு மின்-பைக் மற்றும் பொருட்களை டிராம் நிறுத்தத்தின் கூரையில் வைத்து எரித்தனர்.

சூரிச் தீயணைப்புத் துறை  விரைந்து சென்று தீயை அணைத்தது.

இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சொத்து சேதம் பல்லாயிரக்கணக்கான சுவிஸ் பிராங்குகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles