-0.1 C
New York
Sunday, December 28, 2025

அடுத்தடுத்த வெடிப்புகள் – பற்றியெரிந்த கட்டடம்.

சோலோதர்ன் நகராட்சியில்  பிரெய்டன்பாக்கின்  நேற்று பாரிய  வெடிப்பு இடம்பெற்றதை அடுத்து, அடர்ந்த கரும் புகை வானத்தில் எழுந்தது.

தொடர்ச்சியான வெடிப்புச் சத்தம் கேட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாஸ்வாங்ஸ்ட்ராஸ்ஸில் நேற்றுக் காலை 7:30 மணிக்குப் பிறகு, வெடிப்பு பற்றிய புகாரைப் பெற்றதாக சோலோதர்ன் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஒரு நிறுவன கட்டிடம் பாதிக்கப்பட்டது.

அங்கு பட்டாசுகளும் சேமிக்கப்பட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாஸ்வாங்ஸ்ட்ராஸைச் சுற்றியுள்ள பகுதியைத் தவிர்க்குமாறு சோலோதர்ன் கன்டோனல் காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியது.

கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட வேண்டும், முடிந்தால் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு சற்று முன்பு, அனைத்துத் தடைகளும் அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனி எந்த ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்பட்டது.

கட்டடத்தின் உள்ளேயும் வெளியேயும் பெரிதும் சேதமடைந்துள்ளது.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles