ஹோர்கனில் உள்ள சூரிச் ஏரியில் நேற்றுக்காலை ஒரு கார், படகில் ஏற்றப்பட்ட போது ஏரிக்குள் பாய்ந்தது.
அந்தக் காரில் இருந்த 50 வயது ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பி வெளியேறினார்.
கடல்சார் காவல்துறை மற்றும் ஒரு தனியார் இழுவை நிறுவனம் மூலம் 30 மீட்டர் ஆழத்தில் இருந்து கார் மீட்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து சூரிச் கன்டோனல் காவல்துறையினர் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துடன் இணைந்து விசாரித்து வருகின்றனர்.
மூலம் – 20min.