சுவிட்சர்லாந்தின் பெடரல் கவுன்சிலும் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது,
நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில், இது குறித்து பரிசீலித்து வருவதாக சுவிஸ் வெளியுறவுத் துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெறும், மத்திய கிழக்கு மோதல் மற்றும் இரு-நாடுகள் தீர்வு குறித்த மாநாட்டில் சுமார் 120 நாடுகள் பங்கேற்றுள்ளன.
சுவிஸ் பிரதிநிதிகள் குழுவும் அங்கு இரு-நாடுகள் தீர்வுக்கு ஆதரவாகப் பேசியது.
இது மட்டுமே பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் “அமைதி, பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்க்கையை” உத்தரவாதம் செய்ய முடியும் என்றும் சுவிஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், சுவிட்சர்லாந்தைப் பொறுத்தவரை, பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது இரு-நாடுகள் தீர்வை அடிப்படையாகக் கொண்ட நீடித்த அமைதிக்கான முன்னோக்கின் ஒரு பகுதியாகும்.
இருப்பினும், இந்த அங்கீகாரம் சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே நிகழ முடியும்.
அதாவது, இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை இரண்டையும் உறுதி செய்யும் இரு-நாடு தீர்வுக்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும் என்றும் சுவிஸ் தெரிவித்துள்ளது.
மூலம்- 20min.

