Basel இல் Rhine இல் படகு ஒன்று செயலிழந்து ஏனைய படகுகளுடன் மோதி விபத்து ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆற்றில் பயணம் செய்த படகு இயந்திரக் கோளாறினால் செயலிழந்ததை அடுத்து, படகோட்டியினால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
இதனால் படகு ஏனைய படகுகள் மீது மோதியது.
தீயணைப்புப் பிரிவினர் விரைந்து சென்ற படகையும் படகில் இருந்தவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
மூலம்- 20 min.

