Aargau கன்டோனில் உள்ள Wohlen, இல் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மீது மோதியதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
16 வயதுடைய இளைஞன் ஒருவர் ஓட்டிச் சென்ற காரே வீட்டின் மீது மோதியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற 16 வயதுடைய சோசோவவோ இளைஞனும், 19 வயதுடைய சுவிஸ் பயணியும் உயிரிழந்தனர்.
அந்தக் காரில் பயணித்த சூரிச்சை சேர்ந்த 19 வயதுடைய பயணி படுகாயம் அடைந்துள்ளார்.
மூலம்- 20 min.

