சுவிட்சர்லாந்தில் வசிக்கும் செர்பிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பம் விடுமுறைக்குச் சென்ற போது இத்தாலியில் சிக்கியுள்ளது.
இத்தாலிய-ஸ்லோவேனிய எல்லைக்கு அருகில் நெடுஞ்சாலையில் மற்றொரு வாகனத்துடன் மோதியதில், அவர்களின் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனைய பயணிகள் உடின் மற்றும் கோரிசியா இடையே இத்தாலிய மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இத்தாலிய செய்தி நிறுவனமான அன்சா செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்லோவேனியாவில் இன்று ஏற்பட்ட விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தினால் கார் எல்லையின் மறுபுறம் வீசப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு இத்தாலிய மீட்புப் பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர்.
இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மூலம்- bluewin

