3 C
New York
Monday, December 29, 2025

நீச்சலில் ஈடுபட்டவர் மரணம்.

லிம்மட்டில் நேற்றுப் பிற்பகல் 3:30 மணியளவில் நீச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நீந்திக் கொண்டிருந்தவர் காணாமல் போனதை அடுத்து அவரைத் தேடுவதற்காக கீழ்நோக்கி உள்ள அனைத்து பாலங்களிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

மாலை 6:30 மணிக்குப் பின்னர் 65 வயதான போர்த்துகீசிய நபர் சூரிச் கன்டோனல் காவல்துறையின் ஹெலிகொப்டர் மூலம் டயட்டிகான் அருகே கண்டுபிடிக்கப்பட்டார்.

கன்டோனல் கடல்சார் காவல்துறையினரால் மீட்கப்பட்ட போது அவர் இறந்து விட்டார்.

இந்த விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles