19.6 C
New York
Wednesday, April 1, 2026

அடுத்தடுத்து 4 இடங்களில் தீவைப்பு – சிக்கினார் ஆசாமி.

ஆர்காவ் மாகாணத்தில் நேற்று நள்ளிரவுக்கு முன்னர் அடுத்தடுத்து நான்கு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

முதல் தீவிபத்து நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதையடுத்து 3 இடங்களில் குறுகிய நேரத்துக்குள் தீவிபத்துகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சம்பவங்களுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று காலை, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு வழக்கறிஞர் அலுவலகம் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மூலம்-bluewin

Related Articles

Latest Articles