25.2 C
New York
Saturday, June 20, 2026

ஜெனீவா ஏரியில் விழுந்த விமானம்.

ஜெனீவா ஏரியில்  Vevey  அருகே இரண்டு இருக்கைகள் கொண்ட ஒரு சிறிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இந்தச்  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கிய விமானத்திலிருந்த இரண்டு பேர், எந்த காயமும் இல்லாமல் தப்பியுள்ளனர். விமானம் ஏரியின் அடிப்பகுதியில் மூழ்கியது.

ஏரியில் விமானம் மோதியதற்கான காரணம் பொலிசாருக்கு சரியாகத் தெரியவில்லை.

விழுந்த விமானம் இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய விமானம் என்பதை பொலிசார் உறுதிப்படுத்தினர்.

விமானத்தில் இருந்த இரண்டு பேர் விமானத்திலிருந்து இறங்கி ஒரு தனியார் படகில் ஏறியுள்ளனர்.அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles