25.2 C
New York
Saturday, June 20, 2026

அதிக உயரத்தை தொட்டது சூரியசக்தி விமானம்.

சூரிய சக்தியில் இயங்கும் சுவிஸ் விமானமான சோலார்ஸ்ட்ராடோஸ், இதுவரை இல்லாதளவுக்கு உயரத்தில் பறந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை சுவிட்சர்லாந்திற்கு மேலே 9,521 மீட்டர் உயரத்தை விமானி ரஃபேல் டோம்ஜான் எட்டினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெர்ட்ராண்ட் பிக்கார்ட் மற்றும் சோலார் இம்பல்ஸ் ஆகியோரின் சூரியசக்தி விமானம் 9,235 மீ உயரத்துக்கு பறந்ததே சாதனையாக இருந்தது.

தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள சியோன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், 5 மணி நேரம் 9 நிமிடங்கள் பறப்பில் ஈடுபட்டது.

HB-SXA சோதனை விமானம் சூரிய சக்தியால் மட்டுமே இயக்கப்படுகிறது. அதன் உலக உயர சாதனை முயற்சியில் வெற்றி பெற்றது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles