-0.2 C
New York
Tuesday, December 30, 2025

3 மலையேற்ற வீரர்களின் சடலங்கள் மீட்பு.

இந்த மாத தொடக்கத்தில் அப்பர் வலைஸ் பகுதியில் மூன்று மலையேற்ற வீரர்களின் உடல்களை சுவிஸ் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்: அவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்தவர்கள்.

ஓகஸ்ட் 4 ஆம் திகதி, ஜெர்மாட் அருகே உள்ள மேட்டர்ஹார்ன் மலையில் ஏறும் போது 72 வயதான ஜெர்மன் நபர் ஒருவர் விழுந்து இறந்தார். சுமார் 4,150 மீட்டர் உயரத்தில் உள்ள அன்டெரர் ரோட்டர் டர்மில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஓகஸ்ட் 9 ஆம் திகதி, சாஸ் கிரண்ட் நகராட்சியில் உள்ள லாகின்ஹார்ன் சிகரத்தின் கிழக்கு சரிவில் இருந்து 49 வயதான ஒஸ்ரிய நபர் ஒருவர் விழுந்து இறந்தார்.

இறுதியாக, ஓகஸ்ட் 11 ஆம் திகதி, 28 வயதான பிரெஞ்சுக்காரர் ஒருவர் ஜெர்மாட் அருகே உள்ள டெஸ்டா டெல் லியோன் மலையிலிருந்து 3,330 மீட்டர் உயரத்தில் விழுந்தார். அந்த நபர் அப்பகுதியின் மலைகளில் தனியாக நடைபயணம் மேற்கொண்டிருக்கலாம்.

இந்த மூன்று விபத்துகளின் சூழ்நிலைகள் குறித்து மேலும் அறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.

Related Articles

Latest Articles