ஜூலை 17 ஆம் திகதி மூன்று பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றசாட்டப்பட்டு, பெர்ன் கன்டோனில் 28 வயது நபர் ஒருவர் வியாழக்கிழமை, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிகமாக ஜூலை 16 அல்லது 17, அன்று பியல் நடந்ததாகக் கூறப்படும் இதேபோன்ற சம்பவம் குறித்து மற்றொரு புகாரும் பின்னர் பெறப்பட்டுள்ளது.
பெர்னீஸ் ஜூரா–சீலாந்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நிகழ்வுகள் குறித்த கூடுதல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மூலம்- 20min.