சுவிஸ் ஊழியர் தொழிற்சங்க வலையமைப்பான, TravailSuisse, வரும் ஆண்டில் அனைத்து ஊழியர்களுக்கும் சராசரியாக 2% சம்பள அதிகரிப்பைக் கோருகிறது.
இது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடுகட்டுவதுடன் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட ஊதியப் பற்றாக்குறையை ஈடுசெய்யும் என்று அது கூறுகிறது.
அதன் உறுப்பினர் சங்கங்களுடன் சேர்ந்து, TravailSuisse செவ்வாயன்று பெர்னில் நடத்திய ஊடக சந்திப்பில், இலையுதிர்காலத்திற்கான தனது சம்பளக் கோரிக்கைகளை முன்வைத்தது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, குறிப்பாக சுகாதார காப்புறுதி மற்றும் வாடகைகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகியவற்றின் காரணமாக, சங்கம் சம்பள உயர்வுகளைக் கோருகிறது.
மூலம்- swissinfo