நியூசாடெல் கன்டோனில், கோர்செல்லஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை கொலை செய்யப்பட்ட நிலையில், மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கன்டோனல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்வதற்காக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் அவர் காயமடைந்தார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விரிவான பொலிஸ் நடவடிக்கை நடந்து வருகிறது. விசாரணைக்காக ஒரு வீதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min.

