பெர்ன் கன்டோனில், இ-பைக் விபத்தில் படுகாயம் அடைந்தவர் உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை, மாலை 4:10 மணியளவில், வேபர்னில் (கோனிஸ் நகராட்சி) உள்ள லிண்டன்வெக்கில் இந்த விபத்து இடம்பெற்றது.
செஃப்டிஜென்ஸ்ட்ராஸ்ஸிலிருந்து லிண்டன்வெக் வழியாக இ-பைக் ஓட்டுநர் பயணித்துக் கொண்டிருந்தபோது, செல்ஹோஃபென்ஸ்ட்ராஸ்ஸுக்கு அருகில் தரையில் விழுந்தார்.
பலத்த காயமடைந்த பெண், ஆரம்ப மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் ஆபத்தான நிலையில் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் அன்று மாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர் பெர்ன் கன்டோனைச் சேர்ந்த 74 வயதான சுவிஸ் பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min.