18.2 C
New York
Sunday, September 7, 2025

ரணில் உடல்நிலை மோசம் – ஐசியூவில் அனுமதி.

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணை பணிப்பாளர் மருத்துவர் ருக்‌ஷன் பெல்லன, தெரிவித்துள்ளார்.

மகசின் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க முன்னதாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலைக்கு சிறப்பு சிகிச்சை தேவை என்றும்,  சிறைச்சாலை மருத்துவமனையில் அதற்கான வசதிகள் இல்லை என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்  அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதையடுத்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக, அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக மருத்துவர் ருக்‌ஷன் பெல்லன,  குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் மாற்றப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles