ஆராவ்-ரோஹரில் கடந்த வியாழக்கிழமை, நான்கு வயது சிறுவன் நான்காவது மாடி பல்கனியில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்தான்.
ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன், விபத்து நடந்த நேரத்தில் தன் தாயின் பராமரிப்பில் இருந்ததான்.
இதனால், அந்தப் பெண் தனது பராமரிப்பு கடமையை மீறிரானா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தவறிழைத்த து கண்டறியப்பட்டால் தாய்க்கு சட்டரீதியான விளைவுகள் கடுமையானதாக இருக்கலாம்.
அலட்சியமாக உடல் ரீதியான தீங்குக்கு தண்டனை விதிக்கப்படலாம் – தீவிர நிகழ்வுகளில், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்பு ஹெலிகொப்டர் மூலம் சூரிச்சில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
அவனது உடல்நிலை தற்போது முன்னேறியுள்ளது.
மூலம்- 20min

