சூரிச் கன்டோனில் உள்ள வால்டில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை அவர் தனது குடியிருப்பில் இருந்து வெளியேறியிருந்தார்.
அவர் காணாமல் போனதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த து.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, அந்தப் பெண் இறந்து கிடந்ததாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
காணாமல்போன நபர் தனது வீட்டிலிருந்து வெகு தொலைவில் வீதியில் விழுந்து கிடந்தார்.
வன்முறைக் குற்றத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
மூலம்- 20min