லீபிஸ்டோர்ஃப் கிராம மையத்தில் சனிக்கிழமை மதியம் 12:30 மணியளவில், தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வாகன நிறுத்துமிடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய, ஒற்றை இருக்கை மின்சார வாகனம் தீப்பிடித்தது.
சீ-லாக் தீயணைப்புத் துறையினர் விரைவாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அருகில் உள்ள கட்டடத்திற்குத் தீ பரவாமல் பாதுகாத்தனர். இருப்பினும், வெப்பத்தால் அருகில் இருந்து மூன்று வாகனங்களும் கட்டிடத்தின் முகப்பும் சேதமடைந்தன.
புகையை சுவாசித்த ஒருவர் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தீ விபத்து ஏற்பட்ட வாகனம் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo