16.9 C
New York
Thursday, September 11, 2025

சூரிச் நகராட்சி பணியாளர்களுக்கு மகப்பேற்றுக்கு முன் 3 வார விடுமுறை.

சூரிச் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, குழந்தை பிறப்பதற்கு மூன்று வாரங்கள்  முன்னர் ஊதியத்துடன் கூடிய மகப்பேற்று விடுமுறை வழங்கப்படவுள்ளது.

நேற்று சூரிச் நகர சபை தெளிவான பெரும்பான்மையுடன் இதற்கான அனுமதியை வழங்கும் வகையில், தொழிலாளர் சட்டத்தில் ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது.

இதன் மூலம், கர்ப்பிணிப் பெண்கள் குழந்தை பிறப்பதற்கு முன்னர் மூன்று வாரங்களும், குழந்தை பிறந்த பின்னர், 16 வாரங்களுக்கும்  விடுப்பு வழங்கப்படும்.

இதன் மூலமாக, குழந்தை பிறக்கும் போது அல்லது தத்தெடுக்கும் போது பெற்றோர்கள் தங்கள் பணிச்சுமையை 20 சதவீதம் குறைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தம் 2022 இல் சமூக ஜனநாயகக் கட்சி (SP) சமர்ப்பித்த ஒரு தீர்மானத்திலிருந்து உருவாகிறது.

SVP மற்றும் FDP ஆகியவை புதன்கிழமை இந்த திட்டத்தை எதிர்த்தன.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles