உலகின் மிக அமைதியான 5 நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இடம்பெற்றுள்ளது.
பூகோள அமைதிச் சுட்டி -2025 என்ற பட்டியலை சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், மிகவும் அமைதியான நாடாக முதலிடத்தில் ஐஸ்லாந்து இடம்பெற்றுள்ளது. இரண்டாமிடத்தில் அயர்லாந்தும், மூன்றாமிடத்தில் நியூசிலாந்தும் உள்ளன.
நான்காவது இடத்தில் சுவிட்சர்லாந்தும், ஒஸ்ரியாவும் பகிர்ந்து கொண்டுள்ளன.
சிங்கப்பூர், போர்ச்சுக்கல், டென்மார்க், ஸ்லோவேனியா, பின்லாந்து ஆகிய நாடுகள், முதல் 10 இடங்களுக்குள் உள்ளன.
கடைசி இடத்தில் ரஸ்யாவும், அதற்கு முன்னைய இடத்தில் உக்ரைனும் இருக்கின்றன.