சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு, அதிகம் சூட்டப்பட்ட முதல் பெயர் நோவா ஆகும்.
அதே நேரத்தில் கடந்த ஆண்டு பெண் குழந்தைகளுக்கான தரவரிசையில் எம்மா முன்னிலையில் உள்ளது.
பெடரல் புள்ளியியல் அலுவலகம் வியாழக்கிழமை தனது வருடாந்த பெயர் புள்ளிவிவரங்களில், மியா என்ற பெயரை, எம்மா முந்தியதாக அறிவித்துள்ளது.
முந்தைய ஆண்டைப் போலவே, பெண் குழந்தைகளுக்கான பெயர்களில் சோபியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்த தரவுகளின்படி, ஆண் குழந்தைகளுக்கான பெயர்களுக்கான பட்டியலில், எந்த மாற்றங்களும் இல்லை.
2023இல், லியாம், நோவாவுக்குப் பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மேட்டியோ மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
ஒட்டுமொத்தமாக, இது ஒரு நீண்டகால முறையாகத் தொடர்கிறது.
ஆண் குழந்தைகளின் முதல் பெயர் நோவா, ஏற்கனவே 2010, 2011, 2013 முதல் 2017 வரை மற்றும் 2021 முதல் 2023 வரை மிகவும் பிரபலமான பெயராக இருந்தது.
2011, 2012, 2014, 2017, 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளுக்கான மிகவும் பிரபலமான முதல் பெயர் எம்மாவாகும்.
மூலம்- swissinfo