ஒபர்சி ஏரியில் இரண்டு படகுகள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 10:20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
46 வயதான படகு கப்டன் ஒருவர், இரண்டு நண்பர்களுடன், சூரிச் ஏரியிலிருந்து ஒபர்சி ஏரிக்குள் தனது மோட்டார் படகை ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது, ஏழு பேரை ஏற்றிச் சென்ற மற்றொரு படகுடன் மோதி விபத்து ஏற்பட்டது.
இரண்டாவது படகில் இருந்த, 36 வயதுடைய ஒரு ஆணும் அடையாளம் காணப்படாத ஒரு பெண்ணும் படுகாயமடைந்ததால் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் நான்கு பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.
மூலம்- swissinfo