கிளாரஸ் மாகாணத்தில் உள்ள மோலிஸில் சுவிஸ் மல்யுத்த மற்றும் அல்பைன் விழாவில் நேற்றுமுன்தினம் மாலை நெஸ்டல் மற்றும் நேஃபெல்ஸ் இடையே முகாம் அருகே ஒருவர் ரயில் மோதி படுகாயம் அடைந்துள்ளார்.
33 வயதான அந்த நபர் தெரியாத காரணங்களுக்காக ரயில் தண்டவாளத்தில் இருந்துள்ளார்.
விபத்து நடந்த இடம் அதிகாரப்பூர்வ முகாம் தளத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
ரயில் தண்டவாளங்களை அணுகும் இடம் சுமார் இரண்டு மீட்டர் உயர வேலிகளால் சூழப்பட்டுள்ளது.
வேலி அமைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த நபர் ஏன் அதிகாரப்பூர்வ நடைபாதையை விட்டு வெளியேறி தண்டவாளத்தில் ஏறினார் என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தினால். கிளாரஸ் பகுதியில் ரயில் சேவைகள் பல மணி நேரம் தடைபட்டன.
இதன் விளைவாக, திருவிழாவிற்குச் சென்றவர்கள் வீடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாக சுவிஸ் ஃபெடரல் ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்-swissinfo