அமெரிக்கா நேற்று முதல், 800 டொலருக்கும் (CHF640) குறைவான மதிப்புள்ள பொதிகளின் வரி இல்லாத இறக்குமதியை ரத்து செய்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பத்தில் சீனாவிற்கான விலக்குரிமையை ரத்து செய்திருந்தார்.
ஜூலை மாத இறுதியில் உலகம் முழுவதில் இருந்து வரும் பொதிகளுக்கு வரி இல்லாத நிலையை முடிவுக்குக் கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற பல நாடுகளில் உள்ள அஞ்சல் சேவை வழங்குநர்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் பெரும்பாலான பொதிகளை இனி ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
பொதிகள் விநியோக சேவையான DHL, அமெரிக்காவிற்கு பொருட்களை அனுப்புவதை பெருமளவில் கட்டுப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளது.
வரி இல்லாத பொதிகளில் ஆபத்தான மருந்துகள் அமெரிக்காவிற்குள் கடத்தப்படுவதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
மூலம்- swissinfo