சூரிச்சில் உள்ள ஹோரி நகராட்சியில் நேற்று மாலையில் ஒரு கட்டிடம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், பல மீட்டர் உயரத்திற்கு தீப்பிழம்புகளைக் காணப்பட்டதாகவும் அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 9:15 மணிக்கு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அங்கு சென்ற போது, ஒரு களஞ்சியம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
தீ ஏற்கனவே ஒரு கொட்டகைக்கு பரவியிருந்ததாக சூரிச் கன்டோனல் பொலிஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு கட்டிடத்திற்கு தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இப்போது விசாரிக்கப்படுகிறது.
மூலம்- 20min.