16.6 C
New York
Monday, September 8, 2025

சுவிஸ்- ஜெர்மன் ஜனாதிபதிகள் சந்திப்பு.

சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர் நேற்று பெர்லினில் ஜெர்மன்  ஜனாதிபதி  பிரீட்ரிக் மெர்ஸை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐரோப்பாவில் பாதுகாப்புக்கு இரு நாடுகளின் அர்ப்பணிப்பு மற்றும் அமெரிக்க வரிகளின் விளைவுகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

கெல்லர்-சுட்டர் மற்றும் மெர்ஸ் ஆகியோர் உக்ரைனில் நடந்து வரும் போர் குறித்தும் கலந்துரையாடிய தாக், சுவிஸ் வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

 மோதலுக்கு அமைதியான தீர்வைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தை சுவிட்சர்லாந்து வலியுறுத்த சுவிஸ்  ஜனாதிபதி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.

உக்ரைனில் அமைதிக்கான  மாநாட்டிற்கான இடமாக ஜெனீவாவை மெர்ஸ் ஆதரித்தார்.

அடுத்த  கூட்டத்தில் மீண்டும் ஜெனீவாவை முன்மொழிவேன் என்று அவர் அறிவித்தார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles